CAA
CAA facebook
இந்தியா

CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | ஆதரவும், எதிர்ப்பும்...

PT WEB

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அஹிரி தோலா படித்துறையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் கங்கா ஆரத்தி எடுத்து வழிபட்டனர். படித்துறையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, சட்டம் அமலுக்கு வந்ததை அவர்கள் வரவேற்றனர்.

அதேநேரம் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் தேசிய அளவில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.