Nutritional labels  web
இந்தியா

’உணவுப் பொட்டலங்களில் தெளிவான ஊட்டச்சத்து லேபிள்..’ - நாடாளுமன்றக் குழு உத்தரவு

பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு அளவை முன்பக்க லேபிளில் தெளிவாகக் காட்ட FSSAIக்கு கடும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது..

PT WEB

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் ஊட்டச்சத்து விவரங்களை தெளிவாகக் காட்டும் விதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை, கொழுப்பு, உப்பு அளவுகளை பொதுமக்கள் எளிதில் புரிய சிவப்பு, மஞ்சள், பச்சை நிறக் குறியீடுகள் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாக்கெட் உணவுகளின் முன்பகுதியில் ஊட்டச்சத்து அளவுகளைத் தெளிவாகக் குறிப்பிடும் விதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்த, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு ((FSSAI)) நாடாளுமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.

Nutritional labels

சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பின் அளவை உணர்த்த சிவப்பு, மஞ்சள், பச்சை நிறக் குறியீடுகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2022இல் வரைவு விதிகள் வெளியிடப்பட்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இறுதி முடிவெடுக்கப்படாமல் இருப்பதற்கு நாடாளுமன்றக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களால் ஏற்படும் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.