உத்தரப்பிரதேச பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கிய கும்பமேளாவுக்கு இதுவரை 50 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராட பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய 10 நாட்கள் இருக்கும்போதே பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது.