வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அடுத்ததாக கத்தோலிக்க சர்ச்சுகளை குறிவைக்க வேண்டும் என்ற ரீதியில், ஆர்எஸ்எஸ் சித்தார்ந்த பின்புலம் கொண்ட ‘Organiser' இதழ் வெளியிட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தியாவில் அதிக நிலம் யாரிடம் உள்ளது? கத்தோலிக்க சர்ச்சுகளிடமா அல்லது வக்பு வாரியத்திடமா” என்ற தலைப்பில் ‘Organiser' கட்டுரை வெளியிட்ட கட்டுரையில், கத்தோலிக்க அமைப்புகளிடம் 7 கோடி ஹெக்டேர் நிலம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார். அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை தனது இணையப் பக்கத்திலிருந்து Organiser நீக்கியுள்ளது.