model image x page
இந்தியா

பீகார் | சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்.. i-n-d-i-a கூட்டணி எதிர்ப்பு!

பிஹாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம், மாநிலத்தில் குறைந்தது 2 கோடி வாக்காளர்களை, பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று i-n-d-i-a கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்

PT WEB

பிஹாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம், மாநிலத்தில் குறைந்தது 2 கோடி வாக்காளர்களை, பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று i-n-d-i-a கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக 11 கட்சிகளைச் சேர்ந்த 20 தலைவர்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து தங்களது ஆட்சேபங்களைப் பதிவு செய்தனர். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

model image

இதன்படி 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும். இவர்களில் 1987 ஜூலை 1 க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளையும் வழங்க வேண்டும். இந்த சிறப்பு திருத்தத்தின் மூலம் பிஹாரின் 20 விழுக்காடு புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடும் என்றும் வேறு பலரும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்றும் i-n-d-i-a கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.