ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சரத்பவார்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சரத்பவார் pt web
இந்தியா

அரசியல் சாசன முன்னுரையிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள்... எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

PT WEB

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குச் சென்ற முதல் நாளில் எம்.பி.க்களுக்கு அரசியல் சாசனத்தின் நகல் வழங்கப்பட்டது. இதன் முன்னுரையில், மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதுதான் உண்மையான முன்னுரை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறியுள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இதையடுத்து ஆதிர் ரஞ்சன், “இந்த வார்த்தைகள் 1976-ல் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டதை நாங்கள் நன்கறிவோம். மத்திய பாரதிய ஜனதா அரசு உள்நோக்கத்துடன் இந்த வார்த்தைகளை தற்போது நீக்கியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

“மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது குற்றம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பினய் விஸ்வம் தெரிவித்துள்ளார். “எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன நகலில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது பாரதிய ஜனதாவின் பாரபட்சமான மனநிலையை காட்டுகிறது” என சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.