ஆபரேஷன் சிந்தூர் pt desk
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் | "தாக்குதலை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்தது குற்றம்" - ராகுல்காந்தி

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவகாரத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மவுனம் கண்டிக்கத்தக்கது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

PT WEB

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்படதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ராகுல் காந்தி, நமது தாக்குதலை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்தது குற்றம் எனவும், யார் அதற்கு அனுமதியளித்தது எனவும் வினவியிருந்தார். முன்கூட்டியே தெரிவித்ததால், எத்தனை போர் விமானங்களை நமது விமானப்படை இழந்தது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

operation sindoor - modi

அதனைத் தொடர்ந்து தற்போது, இந்த விவகாரத்தில் ஜெய்சங்கர் பதிலளிக்காமல் அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை நாம் இழந்தோம் என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு செய்தது குற்றம் எனவும், உண்மையை தேசம் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகே பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தது.