உமர் அப்துல்லா pt web
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் | வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தலைவர்கள்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தியாகிகளின் கல்லறைக்கு செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

PT WEB

ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தியாகிகளின் கல்லறைக்கு செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். "இது வெளிப்படையான ஜனநாயக விரோத நடவடிக்கை" என விமர்சித்துள்ள முதல்வர் உமர் அப்துல்லா, ”ஜூலை 13 எங்கள் ஜாலியன் வாலா பாக் என்றும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய முஸ்லிம்கள் இன்று வில்லன்களாக சித்தரிக்கப்படுவது வெட்கக்கேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். தியாகிகளின் கல்லறைகளுக்கு செல்ல மறுக்கப்பட்டாலும், அவர்களின் தியாகங்களை மறக்க மாட்டோம்" என்றும் பதிவிட்டுள்ளார்.

உமர் அப்துல்லா

1931இல் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக போராடிய 22 காஷ்மீரிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக ஓவ்வொரு ஆண்டும் ஜூலை 13ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2019இல் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் இது பொது விடுமுறை தின பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.