உக்ரைனுக்கு குரல் எழுப்பும் அமெரிக்கா, ஐரோப்பா.. ஈரானுக்காக ஏன் பேசவில்லை? - உமர் அப்துல்லா கேள்வி
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஈரானுக்கு ஆதரவாக சில அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ஈரான் எதுவும் செய்துவிடவில்லை..
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமைதி காப்பது குறித்து அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ஈரான் எதுவும் செய்துவிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஈரானில் உள்ள காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்துள்ளார். இந்த விஷயத்தில் இஸ்லாமிய நாடுகளும் அமைதி காப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.