அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, அஜித் தோவலை கைக்குலுக்கி அதிபர் புடின் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரஷ்ய நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்குவை அஜித் தோவல் சந்தித்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தேசிய நலன்களை கருத்தில்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.