இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு முதல் நடிகர் அஜித்தின் கருத்து வரை விவரிக்கிறது.
ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு.. சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
டெல்லி ஜே.என்.யு மாணவர் தேர்தலில் ஒட்டுமொத்த பதவிகளையும் வென்ற இடதுசாரி மாணவர்கள்... தலைவராக அதிதி மிஸ்ராவும், துணைத் தலைவராக கோபிகா பாபுவும் தேர்வு...
பிஹார் முதற்கட்ட தேர்தலில் 64.66 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு... 1951ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பிஹாரில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என தகவல்...
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை நிர்ணயிக்க தமிழ்நாடு அரசு முடிவு... ஆட்சேபம் இருந்தால் கருத்து தெரிவிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தல்.
எஸ்ஐஆர்க்கு எதிராக வரும் 11ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்... திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவிப்பு...
அடுத்த ஆண்டுக்குள் இந்தியா வரவிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்... இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பேச்சு...
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய கல்மேகி சூறாவளி புயல்... வீடுகள், குடியிருப்புகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் பொதுமக்கள்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி... 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை....
தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது... கரூர் துயரம் தொடர்பான தனது பேச்சு தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து...