மும்பையை சேர்ந்த தம்பதியின் உறவினர்களும் அவர்களின் குழந்தை ஒன்றும் அமெரிக்காவில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இக்குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது. இவர்கள் இக்குழந்தையை ஒரு சில மாதங்கள் இந்தியா அழைத்து வைத்து அவர்களின் வீட்டில் வைத்து பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் , அக்குழந்தையை தங்களின் குழந்தையாக தத்தெடுக்க விரும்பிய தம்பதியினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,
சிறார் நீதி மற்றும் தத்தெடுத்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இந்த குழந்தை தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலிலோ அல்லது சட்ட சிக்கலிலோ இல்லை. உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை தத்தெடுக்க இங்குள்ள சட்டத்தில் இடம் இல்லை. அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை.
அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, அமெரிக்காவிலிருந்து குழந்தையைத் தத்தெடுப்பதற்கான அனைத்து தேவையான சட்டநடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அதன்பின்னரே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மனுதாரர்கள் மேற்கொள்ள முடியும்என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மனுவை பெஞ்ச் தள்ளுபடி செய்தது.