நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்  கோப்பு புகைப்படம்
இந்தியா

மத்திய பட்ஜெட்டில் கவனத்தை ஈர்க்கும் அறிவிப்புகள் எதுவும் இருக்காது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

webteam

டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொதுத் தேர்தலுக்கு முன் தாக்கலாகும் கடைசி பட்ஜெட் என்பதால் அரசின் இடைக்கால செலவுகளுக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாக மட்டுமே இருக்கும். எனவே இதில் தொழிற்துறையினர் எதிர்பார்க்க ஒன்றும் இருக்காது. தேர்தல் முடிந்து அமையும் புதிய அரசு ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்" என்று குறிப்பிட்டார்.

nirmala sitaraman

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியுஷ் கோயல் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகைகள் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட் தற்போது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் நாள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.