மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்ஃபேஸ்புக்
தமிழ்நாடு
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை, கேள்வி எழுப்பினார்.
boatpt desk
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரங்கள், தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு உள்ளிட்ட தமிழக மீனவர்கள் சார்ந்த விவகாரங்கள் பேசப்பட்டு உடனடி தீர்வுகள் காணப்படுகிறது என்றார்.
மேலும் இலங்கையில் 13-ஆவது சட்டத் திருத்தம், தமிழ் மொழி பேசும் இலங்கை மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் கொண்டு வரப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், அதனை அமல்படுத்த வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார்.