india, stalin x page
இந்தியா

HEADLINES | மீண்டும் சாம்பியன் ஆன இந்திய அணி முதல் திமுக மாநாடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி முதல் திருச்சியில் நடைபெறும் திமுகவின் 12ஆவது மாநில மாநாடு வரை விவரிக்கிறது.

Prakash J

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி முதல் திருச்சியில் நடைபெறும் திமுகவின் 12ஆவது மாநில மாநாடு வரை விவரிக்கிறது.

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு... சபாநாயகரை தகுதி நீக்கக்கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்ப்பு...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு... நேற்று கடைசி தேதியாக இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியது தேசிய தேர்வு முகமை...

சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று திருச்சியில் நடக்கிறது திமுகவின் 12ஆவது மாநில மாநாடு... 10 லட்சம் பேர் வரை பங்கேற்கக்கூடும் என்பதால் ஏற்பாடுகள் தீவிரம்...

இஸ்ரேலுக்கு சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுமதி... ஈரான் முழுமையாக சரணடைய வேண்டும் எனவும் வலியுறுத்தல்...

ஈரானின் நாட்டின் புதிய உயர் தலைவராக காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு... போர்ச் சூழலுக்கு மத்தியில், 88 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுநர்கள் குழு முடிவு...

india

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைந்தார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்... பிஹார் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு...

டெல்லியில் நிசாமுதீன் என்பவரின் வீடு ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசர் மூலம் இடிப்பு...

பதவியை ராஜினாமா செய்ததன் காரணம் உரிய நேரம் வரும் வரை ரகசியமாகவே இருக்கும்... மேற்கு வங்க ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஆனந்த போஸ் பேட்டி...

அகமதாபாதில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.