தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்... சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
தைத்திருநாளை வரவேற்கும் விதமாக, போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.... பழைய பொருட்களை வீதியில் போட்டு எரித்து கொண்டாடிய மக்கள்...
தமிழர் திருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம்... சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்...
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் மேலும் ஒருநாள் நீட்டிப்பு... விடுபட்டவர்கள் இன்றும் பரிசுத் தொகுப்பை பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு...
போகி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை... இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 31ஆம் தேதி வேலைநாளாக அறிவிப்பு...
சாதி, மத வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்குமான திருநாள் பொங்கல் என முதல்வர் ஸ்டாலின் மடல்... நிரந்தர கொரோனா போல தமிழ்நாட்டின் மீது பாஜகவின் வஞ்சகம் தொடர்வதாகவும் குற்றச்சாட்டு...
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பொங்கல் வாழ்த்து.. உழவர் பெருமக்கள், வாழ்வில் ஏற்றம் காண அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம்..
நாட்டில் ஜனநாயக அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.... ஆட்சியாளர்களே ஜனநாயகத்தை சிதைப்பதாகவும் பாஜக மீது மறைமுக தாக்கு...
திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் வருகிற 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 19ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யும் என்றும் அறிவிப்பு...
சென்னையில் 23ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக மூன்று இடங்கள் தேர்வு.... வசதிகள் குறித்து ஆய்வு செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்....
கரூர் துயரச் சம்பவம் விசாரணை தொடர்பாக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்... டெல்லி அலுவலகத்தில் திங்கட்கிழமை ஆஜராகி இருந்த நிலையில் வரும் 19ஆம் தேதி மீண்டும் வர நோட்டீஸ்...
மெர்சல் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரித்த ராகுல்காந்தி... தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் மோடியால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என விமர்சனம்...
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை.... உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு 15ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்.....
ஜனநாயகன் படம் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை, கூட்டணிக்கான கருத்தாக பார்க்கக்கூடாது... காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி...
ஜனநாயகன் படத்துக்கு பாஜக நெருக்கடியா என்ற கேள்விக்கு பதில் அளிக்காத தவெக நிர்வாகி நிர்மல்குமார் ... காங்கிரஸ் தொடர்பான தங்களது பழைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கருத்து....
பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா குற்றச்சாட்டு... ரவுடித்தனம் செய்கிறார்கள், இது ஆரோக்கியமான சினிமா சூழல் அல்ல என்றும் வேதனை...
ரயில் ஒன் செயலியில் முன்பதிவில்லாத டிக்கெட்களை பெறுவோருக்கு 3 விழுக்காடு கட்டண தள்ளுபடி... இன்று முதல் சிறப்பு சலுகை அமலுக்கு வருமென சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு...
களைகட்டும் மும்பை மாநகராட்சி தேர்தல்... ரோபோ உதவியுடன் பரப்புரை மேற்கொள்ளும் தாக்கரே ஆதரவாளர்கள்...
அசாமில் ஒரே மைதானத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பாரம்பரிய நடனமாடி அசத்தல்... 17ஆம் தேதி பிரதமர் மோடி கவுகாத்தி வரும் நிலையில், வரவேற்புக்காக ஒத்திகை...
ஈரானுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு 25 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கும் ட்ரம்ப்... இந்தியாவிற்கு பெரியளவில் பாதிப்பு இருக்காது என மத்திய அரசுத் தரப்பில் தகவல்.
ரஷ்யாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு கீழிறங்கியது இந்தியா.... அமெரிக்கா அளித்த நெருக்கடி எதிரொலி...
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுவர்களை சுடுவதற்கு உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவு... போராட்டத்தின்போது வன்முறை வெடித்த நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரம்...
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி விலை... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 292 ரூபாய்க்கு விற்பனை..