2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... மும்பையில் நாளை இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை....
டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... 6ஜி, குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளில் ஆலோசிக்க திட்டம்...
குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவசரமாக டெல்லி அழைத்து ஆலோசனை நடத்திய கட்சித் தலைமை.... அதிகரித்து வரும் உட்கட்சி மோதல்களை தொடர்ந்து இரண்டு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை...
பிகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஏன் என ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்... வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...
பிகார் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தீவிரம்... கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் இரு தரப்பிலுமே இழுபறி...
அனைத்து வகையான தொழில் வளங்களும் நிறைந்திருக்கும் தமிழ்நாடு, உற்பத்தித் துறையின் லீடராக மாறி வருகிறது... ஏரோ ஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...
நீதிமன்ற ஆணைக்கு பின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இன்று பரப்புரையை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி... தனியார் இடங்களில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி...
கரூர் நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாக அரசிதழில் வெளியீடு... 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ்... மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா என்ற கேள்விக்கு தனக்கு ஓய்வே கிடையாது என பதில்...
தமிழ்நாட்டில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவார்கள்... முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து அரசாணை வெளியீடு...
திண்டுக்கல்லில் நீட் தேர்வில் வெற்றி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த மாணவி கைது... உடந்தையாக இருந்த பெற்றோரையும் கைது செய்தது காவல் துறை...
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்ததால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20ஆக உயர்வு... காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சன் ஃபார்மா மருந்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்...
இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், பேருந்து விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழப்பு... பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்....
டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு... போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி...
தலைநகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட விமான சேவை... டெல்லியில் தரையிறங்க வேண்டிய 15 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் சிரமமடைந்த பயணிகள்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை... வரும் 12ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கருட சேவை... மாடவீதிகளில் திரண்டு மலையப்ப சுவாமியை தரிசித்த பக்தர்கள்....
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை கோலாகலம்... திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு...
உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை கட்டணமின்றி மாற்றிக்கொள்ளும் புதிய வசதி... ஜனவரி முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை... சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 89 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை...
2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல், ஜான் மார்ட்டினிஸ் ஆகிய 3 நிபுணர்களுக்கு பகிர்ந்தளிப்பு.. பெரிய மின்சுற்றுகளுக்கும் குவாண்டம் இயற்பியல் பொருந்தும் என்பதை கண்டுபிடித்ததற்காக உயரிய கவுரவம்...
பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்... இமயமலையில் ஆன்மிக பயணத்தை தொடரும் ரஜினிகாந்துக்கு கோயில் நிர்வாகம் வரவேற்பு...
ரவி மோகனின் ஜீனி படத்தின் முதல் பாடல் வெளியீடு... ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அப்டி அப்டி பாடலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு...