அமெரிக்க பல்கலைக்கழகங்களின் விசா கட்டுப்பாட்டால், இந்திய மாணவர்கள் தற்போது ஐரோப்பாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, மாணவர் விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதனால் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்கின்றனர்.
அதில் 3லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள். தற்போது படிப்பு முடிந்தவுடன் சொந்த நாடு திரும்புவோம் என்பதை நிரூபிக்க போதிய காரணங்கள் இல்லை போன்றவற்றை குறிப்பிட்டு மாணவர்களின் விசா நிராகரிக்கப்படுகிறது. அதனால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 70 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.