மாதிரிப்படம்
மாதிரிப்படம் pt web
இந்தியா

இனி Cheese Nuggetsன் பெயர் வெஜ் நக்கட்ஸ்... என்ன Mcdonalds இதெல்லாம்..!

Angeshwar G

மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களின் தாய் நிறுவனமான Westlife Foodworld Ltd, தங்களது அனைத்து வகையான சீஸ் உணவுப் பொருட்களிலும் உயர்தர சீஸ் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (food and drug administration) கடந்த ஆண்டின் இறுதியில், மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய துரித உணவகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது சில உணவகங்களில் burgers, nuggets போன்ற உணவுப் பொருட்களில் சீஸ்க்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீஸ் போலவே சுவை பொருட்கள் சீஸ்க்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன.

மெக்டொனால்ட் நிறுவனம் தங்களது உணவு லேபிள்கள் மற்றும் உணவுப் பெயர் டிஸ்பிளேக்களில் எந்த வகையான சீஸ் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சரியான அறிவிப்பு வெளியிடாமல், சீஸ் மாதிரிப் பொருட்களை பயன்படுத்துவதாக உணவு ஒழுங்குமுறை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் உண்மையான சீஸ் தான் உண்கிறோம் என தவறாக நினைக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

சீஸ்க்கு மாற்றான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக அகமது நகரில் உள்ள மெக்டொனால்ட் கிளையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தங்களது உணவுப் பொருள் அட்டவணையில் பல உணவுகளில் சீஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. இத்தகைய சூழலில் மகாராஷ்ட்ர FDA தேசிய அளவில் மெனுவில் இருந்து சீஸ் என்ற வார்த்தையை நீக்குமாறு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மெக்டொனால்ட்ஸ் FDAக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது உணவுப் பொருட்களில் சீஸ் என்ற வார்த்தையை நீக்கி வேறு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தற்காலிக உரிமம் ரத்து என்பது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

FDA ஆணையர் அபிமன்யூ காலே கூறுகையில், “உண்மையான சீஸ்க்கு மாற்றாக, சீஸ் போன்ற மாதிரிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றோம். இதன்பின்பு சோதனை மேற்கொண்ட போது சீஸ்க்கு பதிலாக டால்டா பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்” என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் தாய் நிறுவனமான Westlife Foodworld Ltd, வெள்ளிக்கிழமை இதுகுறித்து கூறுகையில், “எங்களின் அனைத்து சீஸ் கொண்ட தயாரிப்புகளிலும் உண்மையான உயர்தர சீஸ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். இந்த பிரச்சனைகளில் நாங்கள் அதிகாரிகள் உடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்.

நாங்கள் உணவின் தரங்களை கடுமையாக பின்பற்றுகிறோம். உணவு தொடர்பான சட்டங்களுக்கும் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். ” என தெரிவித்துள்ளது.