மேயர் பிரியா சென்ற கார் விபத்து.. என்ன நிலவரம்?

சென்னை அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.

சென்னை மாநகராட்சி மேயராக பிரியாராஜன் உள்ளார். இந்த நிலையில், இன்று சென்னை அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். முன்னாள் சென்ற கார் திடீரென திரும்பியதால் மேயர் சென்ற கார் அதன்மீது மோதியது. பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேயரின் கார் இருபுறமும் சேதம் அடைந்தது. இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா புறப்பட்டுச் சென்றார்.

விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com