Prime Minister Modi Twitter
இந்தியா

"மணிப்பூரில் மக்கள் ஆட்சி தேவை" - பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமருக்கு கடிதம்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஆட்சி தேவை என மத்திய அரசுக்கு ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

PT WEB

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் நெருங்கும் நிலையில், அங்கு அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுக்க உடனடியாக மக்கள் ஆட்சியை நிறுவக்கோரி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். குடியரசுத் தலைவர் ஆட்சி ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்டாலும், இதுவரை அமைதியையும் இயல்பு நிலையையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

manipur

எம்எல்ஏக்களின் இந்த நடவடிக்கைக்கு மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்க வேண்டுமே தவிர, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவது அரசியல் நேர்மையற்ற தன்மையை காட்டுவதாக விமர்சித்துள்ளது.