மகாராஷ்டிரா எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. 8 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 ஊழியர்கள் பலியாகி உள்ளனர்.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் ஆயுத தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த ஆயுத தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதி செய்துள்ளார்.

மகாராஷ்ட்ரா: வெடிவிபத்து ஏற்பட்ட இடம்

இதில் 8 தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாகவும், 7 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியில் மண் அள்ளும் கருவிகள் தற்போது ஈடுபட்டுள்ளன. இந்த வெடி விபத்து சத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் வரை கேட்கப்பட்டதாகவும், தொழிற்சாலையில் இருந்து நீண்டநேரம் கடும் புகை எழுந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பந்தாரா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே, “வெடிவிபத்தின்போது தொழிற்சாலையின் கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதுகுறித்து இதுவரை எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை. வெடிவிபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படாலே, “இது மோடி அரசின் தோல்வி” என விமர்சித்துள்ளார்.