மகாராஷ்டிரா
மகாராஷ்டிராமுகநூல்

மகாராஷ்டிரா|தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்.. தண்டவாளத்தில் குதித்த பயணிகள்; 12 பேர் பரிதாப மரணம்!

ஜல்கான் மாவட்டத்தில் மஹேதி-பர்தாடே வழித்தடத்தில் லக்னோவில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது
Published on

மகாராஷ்டிராவில் ரயில் மோதிய விபத்தில் 12 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜல்கான் மாவட்டத்தில் மஹேதி-பர்தாடே வழித்தடத்தில் லக்னோவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனை அறிந்த ரயிலில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கர்நாடகா விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா
“உறுதியாக சொன்னது கலைஞர்.. சொன்னபடி பிரபாகரனை ஜாமீனில் எடுத்தது நான்” - ஆர்.எஸ்.பாரதி சொன்ன வரலாறு!

காயமடைந்தவர்கள் ஜல்கான் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com