இந்தியா

சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு!

சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு!

webteam

சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதேபோல சமையல் எரிவாயுவின் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயுவின் விலை டெல்லியில் ரூ.59 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இத்தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை, ரூ.376.60 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை இந்தத் தொகை ரூ.320.49 ஆக இருந்தது.