இந்தியா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இன்று ஆலோசனை

JustinDurai
குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் மசோதாக்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு, துறை சார்ந்த ஒவ்வொரு அமைச்சகங்களும் எத்தனை மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளன? அலுவல் நாட்களில் எந்தெந்த துறைகளுக்கான கேள்வி நேரம் இருக்க வேண்டும்? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து எதிர்க்கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அவையை சுமூகமாக நடத்துவது சம்பந்தமாகவும் முக்கியமான மசோதாக்கள் குறித்த விவரங்களும் விவாதிக்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.