இமாச்சல பிரதேசம் முகநூல்
இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு.. வேரோடு சாய்ந்த மரங்கள்; பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்!

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரங்கள் சாய்ந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது, இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே இன்று(மார்ச். 30) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு பணியில் மருத்துவ குழுக்கள், போலீஸாா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். மேலும் மூன்று காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இமாச்சல் முதல்வர் சுக்வீர் , எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

நிலச்சரிவு குறித்து தெரிவித்துள்ள இமாச்சல் முதல்வர் சுக்வீர், “ நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.