வட்டாட்சியர் கைது
வட்டாட்சியர் கைதுpt desk

நீலகிரி | பெண்ணுக்கு பாலியல் தொல்லை – வட்டாட்சியர் கைது

கூடலூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலால் மற்றும் மதுவிலக்குப் பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்குப் பிரிவு வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் சித்தராஜ். இவர், ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார். இவர் வார இறுதி நாட்களில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை, கோழிக்கண்டி பகுதியில் வழக்கமாக நாட்டுக் கோழி மற்றும் முட்டைகளை வாங்கச் செல்வதாகக் கூறப்படுகிறது.

Arrested
Arrestedfile
வட்டாட்சியர் கைது
உசிலம்பட்டி | காவலர் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

இந்நிலையில், நேற்று அப்பகுதிக்குச் சென்ற அவர், அங்கு கணவனை இழந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையானதால், வட்டாட்சியர் சித்தராஜை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com