மோடி - மல்லிகார்ஜுன கார்கே முகநூல்
இந்தியா

தகவல் அறியும் உரிமையை பலவீனப்படுத்தும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டு!

தரவு பாதுகாப்பு பெயரில் தகவல் அறியும் உரிமையை குறைக்கும் மோடி அரசுக்கு கார்கே எதிர்ப்பு.

PT WEB

தரவு பாதுகாப்பு என்ற பெயரில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை, மோடி அரசு பலவீனப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.

மத்திய பாஜக அரசின் இந்த செயலை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது எனக்குறிப்பிட்ட கார்கே, சாலையில் தொடங்கி நாடாளுமன்றம் வரை, இதுகுறித்து குரல் எழுப்புவோம் என தெரிவித்தார். அதோடு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வாதிகார போக்குடன் செயல்படும் மத்திய பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.

இதற்கிடையே, தங்க நகைக் கடன் அதிகரித்து வருவது, நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க மோடி அரசு தவறிவிட்டதை வெளிப்படுத்துவதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.