இந்தியா

கேரளா: முஸ்லீம்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைதான பி.சி.ஜார்ஜ் பிணையில் விடுதலை

Veeramani

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாகவும் எனவே அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சியில் ஜார்ஜ் பேசியதாக தகவல் வெளியானது. கருத்தடை மாத்திரைகளை தருவது மூலம் பிற மதத்தவர் எண்ணிக்கையை குறைக்க முயற்சி நடப்பதாக அவர் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.



இத்தகவல்கள் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஜார்ஜ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜார்ஜின் பேச்சின் பின்னணியில் சங் பரிவார் அமைப்புகள் உள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளும் இடதுசாரி அரசும் மதவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் சதீசன் குற்றஞ்சாட்டினார். சர்ச்சைக்குள்ளான ஜார்ஜ், கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பதும் 33 ஆண்டுகள் எம்எல்ஏ பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதையும் படிக்க: கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உரிமையாளருக்கு சரமாரி அடி, உதை