ராகுல் மம்கூத்ததில் இன்ஸ்டா
இந்தியா

மலையாள நடிகைகள் அடுத்தடுத்து புகார்.. கட்சிப் பதவியை ராஜினாமா செய்த காங். எம்.எல்.ஏ.!

பிரபல மலையாள நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Prakash J

பிரபல மலையாள நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் அறியலாம்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மலையாள நடிகை மற்றும் எழுத்தாளரான ரினி ஆன் ஜார்ஜ் தனக்கு எதிராக தவறாக நடந்துகொண்டதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மம்கூத்ததில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடிகையும் எழுத்தாளருமான ரினி ஆன் ஜார்ஜ், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், ஒரு பிரபலமான அரசியல் கட்சியின் ஓர் இளம் தலைவர் தனக்கு எதிராகத் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

நான் இப்போது சட்ட நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ராகுலுக்கு தைரியம் இருந்தால், அவர் என் மீது அவதூறு வழக்குத் தொடரட்டும்
ஹனி பாஸ்கரன்
ஹனி பாஸ்கரன் பதிவு

மேலும் அவர், எந்தப் பெயரையும் வெளியிடவில்லை என்றாலும், பாஜக மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் ராகுல் மம்கூத்ததின் பெயரைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதற்கிடையே, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர், ”இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி. ஷாஃபியிடம் பலர் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் இப்போது சட்ட நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ராகுலுக்கு தைரியம் இருந்தால், அவர் என் மீது அவதூறு வழக்குத் தொடரட்டும்" என்று ஹனி பாஸ்கரன் மலையாளத்தில் பதிவிட்டிருந்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த ராகுல் மம்கூத்ததில்

இந்தக் குற்றச்சாட்டுகளை நான் தனித்தனியாக எதிர்கொள்வேன்” எனச் சொல்லும் தனக்கு எதிராக முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். "குற்றச்சாட்டுகளை எழுப்பிய பெண்களில் யாரும் என் பெயரைக் குறிப்பிடவில்லை அல்லது எந்த புகாரும் கொடுக்கவில்லை. எனக்கு எதிராக ஒரு போலி புகார்கூட இல்லை” என்ற அவர், ”இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்குவது கடினம் அல்ல என்றும் முன்னதாக முகேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அல்லது அமைச்சர் ஏ.கே.சசீந்திரனின் குரல் பதிவு வெளிவந்தபோது ஊடகங்கள் ஏன் இதே போன்ற உற்சாகத்தைக் காட்டவில்லை” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குற்றச்சாட்டுகளை எழுப்பிய பெண்களில் யாரும் என் பெயரைக் குறிப்பிடவில்லை அல்லது எந்த புகாரும் கொடுக்கவில்லை. எனக்கு எதிராக ஒரு போலி புகார்கூட இல்லை”
ராகுல் மம்கூத்ததில்
ராகுல் மம்கூத்ததில்

தொடர்ந்து அவர், “அவரிடம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருந்தால், அவர் சட்டப்பூர்வமாகச் செல்லலாம். அவருக்கு புகார் இருந்தால், அதை நிரூபிப்பது அவருடைய பொறுப்பு. புகாரை எழுப்பிய பெண்ணுடன் நான் ஆரோக்கியமான உரையாடலை நடத்தினேன். மீதமுள்ள உரையாடலை அவள் வெளியிடவில்லை. நானும் அதைச் செய்யவில்லை. நான் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்றவர், மேலும் அவர், “எந்த மூத்த தலைவரும் தன்னை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ராகுல் மம்கூத்ததில்?

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூரில் உள்ள முண்டப்பள்ளியில் நவம்பர் 12, 1989 அன்று பிறந்தார். ’ராகுல் பி.ஆர்’ என்றும் அழைக்கப்படும் ராகுல் மம்கூத்ததில், பாலக்காடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் குரல் முகமாக ராகுல் உள்ளார். மாணவர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் அவர், 2006இல் கேரள மாணவர் சங்கத்தில் (KSU) சேர்ந்தார்.

ராகுல் மம்கூத்ததில்

அவர் KSU அடூர் தலைவர், KSU மாநில பொதுச் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்ததாகவும், பின்னர், 2023இல் இந்திய இளைஞர் காங்கிரஸின் (கேரளா) மாநில பொதுச் செயலாளர், மாநிலச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைவர் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸிலும் தலைமைப் பதவிகளை வகித்ததாகவும் கூறப்படுகிறது. நவம்பர் 2024 பாலக்காடு இடைத்தேர்தலில், ராகுல் மம்கூத்ததில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். அவரது வெற்றி இந்தத் தொகுதியின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ஷாஃபி பரம்பிலின் ராஜினாமாவைத் தொடர்ந்து பாலக்காட்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது.