கேரளா
கேரளாமுகநூல்

கேரளா: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published on

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர், 2019 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு டியூஷனுக்கு வந்த ப்ளஸ் ஒன் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அலைபேசியில் வீடியோ எடுத்து மிரட்டி வந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை இணையத்தில் பரப்பியுள்ளார்.

இதன் மூலம் மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மனோஜ் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், நீதிபதி ஆர்.ரேகா அதிரடி தீர்ப்பளித்தார்.

கேரளா
பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கே அதிகம் செலவிடும் இந்தியர்கள் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

மேலும் மனோஜ் மீது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி, மொத்தம் 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் மனோஜ் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com