kerala, eci x page
இந்தியா

கேரளம் | ஆதிக்கம் செலுத்தும் இடதுசாரிகள், காங்கிரஸ்.. ஓர் அரசியல் பின்னணி!

உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு என்ற பெருமையையும் நம்பூதிரிபாட்டின் அரசு பெற்றது. கேரளா இதுவரை 15 சட்டமன்றத் தேர்தல்களைக் கண்டுள்ளது. இதில் இடதுசாரி கட்சிகள் 9 முறையும் காங்கிரஸ் கூட்டணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

PT WEB

140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டுடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் கேரளமும் ஒன்று. இம்மாநில அரசியலின் பின்னணியைக் காண்போம். திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகள் இணைந்து 1957இல் கேரளா என்ற பெயரில் புதிய மாநிலமாக உருவெடுத்தது. 1957இல் நடந்த தேர்தலில் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது. உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு என்ற பெருமையையும் நம்பூதிரிபாட்டின் அரசு பெற்றது. கேரளா இதுவரை 15 சட்டமன்றத் தேர்தல்களைக் கண்டுள்ளது. இதில் இடதுசாரி கட்சிகள் 9 முறையும் காங்கிரஸ் கூட்டணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

69 ஆண்டுகளில் 12 முதல்வர்களை கேரளா கண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஈ.கே.நாயனார் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 11 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில் தற்போதுள்ள பினராயி விஜயன் 10 ஆண்டு ஆட்சியுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக அதிக ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.