முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் முகநூல்
இந்தியா

பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில், கேதர் ஜாதவ் இணைந்தார்.

PT WEB

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில், கட்சியில்
அவர் இணைந்தார்.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
இளைஞர்களை சந்தித்து, பாஜகவின் விளையாட்டுப் பிரிவை வலுப்படுத்தும் பணிகளை கேதர் ஜாதவ் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வயதான கேதர் ஜாதவ், கடந்த ஆண்டு ஜூன் மாதம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.