பட்டியலின சமூகம்
பட்டியலின சமூகம்முகநூல்

பட்டியலின சமூகத்தை சேர்ந்த எம்எம்ஏ வருகையால் கோயிலை சுத்தம் செய்த பாஜக நிர்வாகி; இடைநீக்கம்!

பட்டியலின சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏ கோயிலுக்கு வந்த சென்றபின் கோயிலை சுத்தப்படுத்திய பாஜக நிர்வாகி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Published on

ராஜஸ்தானின் ஆல்வார் புறநகர் தொகுதியைச் சேர்ந்தவர் டிக்கா ராம் ஜுல்லி. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, (6.4.2025) அன்று ஆல்வார் நகரில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டார்.

இவர் வந்து சென்றபிறகு, கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, அந்தக் கோயில் வளாகத்தில் கங்கை நீரை தெளித்து புனித பூஜைகள் நடத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜக, கியான்தேவ் அகுஜாவை தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக தலைமை.

இந்த சம்பவத்தை கண்டித்து செவ்வாய் கிழமை அன்று மாவட்ட தலைமையகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பாஜகவில் ‘ பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலைக்கு ஒரு சான்று’ என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலளர் தாமோதர இந்த செயலை செய்த பாஜக நிர்வாகி கியான்தேவ் அகுஜாவுக்கு இதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ’பாஜக மாநில தலைவரின் அறுவுறுத்தலின்படி நீங்கள் பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக கியான்தேவ் அகுஜா ஏதேனும் விளக்கமளிக்க விரும்பினால், மூன்று நாட்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்றும், பதிலளிக்கும் பட்சத்தில் அதற்கு தகுந்தாற்போல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பட்டியலின சமூகம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், பாஜக தலைவரை விமர்சித்து, "எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி கோயிலுக்குச் சென்ற பிறகு பாஜக அகுஜா கங்கா தீர்த்தத்தை தெளித்த சம்பவம், தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பைப் பிரதிபலிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதைக் கண்டிக்க எவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அது போதாது. " என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com