ராமச்சந்திர ராவ் x page
இந்தியா

ஆபாச வீடியோ வைரல் | கர்நாடக டிஜிபி பணியிடை நீக்கம்.. மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை!

கர்நாடகாவில் காவல் துறையினருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தனது அலுவலக வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Prakash J

கர்நாடகாவில் காவல் துறையினருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தனது அலுவலக வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் காவல்துறை இயக்குநரான ஜெனரல் (டிஜிபி) ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் இருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இதையடுத்து ராமச்சந்திர ராவ் மீது மாநில அரசின் பணியாளர் நிர்வாகத் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபணமானால் ராமச்சந்திர ராவ் பணி நீக்கம் செய்யப்படுவார் என அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

ராமச்சந்திர ராவ்

இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் சமூகத்தளங்களில் பகிரப்படும் படங்கள் போலியானவை என்றும் ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அது ஒரு பழைய காணொளி என்றும் கூறப்படுகிறது. காணொளியில் காணப்படும் காவல் அறை, பெலகாவி ஐஜிபி அலுவலகத்தினுடையது. ராமச்சந்திர ராவ் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெலகாவி ஐஜிபியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சிவில் உரிமைகள் அமலாக்கத் துறையின் டிஜிபி டாக்டர் கே.ராமச்சந்திர ராவ், தனது வளர்ப்பு மகளும் திரைப்பட நடிகையுமான ரன்யா ராவ், தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, துபாயிலிருந்து 14 கிலோ தங்கத்தை கடத்தும்போது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது செய்திகளில் இடம்பிடித்திருந்தார். இந்த தங்கக் கடத்தல் வழக்கில் அவரது வளர்ப்பு மகள், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார்.

ranya rao

பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடக அரசால் ராவ் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த இடைநீக்க நடவடிக்கை வந்துள்ளது. அந்த நேரத்தில், மார்ச் மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டாய விடுப்பு உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.