குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றம், நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனது நண்பர் விஜயகாந்த் மறைந்ததிலிருந்து தனது உடல் நலன் பாதிக்கப்பட்டுவிட்டதாக, நடிகர் தியாகு கண்ணீர் மல்க தெரிவித்தார்.
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடத்தின் மீது பயிற்சி விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழப்பு.
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.