Headlines: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முதல் நடுக்கடலில் எரிந்த கப்பல் வரை!
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து செயல்படும் சைபர் கிரிமினல்களால் இந்தியர்களுக்கு மாதந்தோறும் 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
"மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்" எனும் பிரசாரத்தை தமிழக வெற்றிக்கழகம் கையில் எடுத்துள்ளது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பதவிகளை தேடி தான் சென்றதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
அரசியலில் அண்ணாமலைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாகவும், விஜய் ஜெயிப்பது கடினம் என்றும் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆழம் பார்த்திருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்புகள் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
சாலை விபத்தில் சிக்கிய சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.