* வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் இறந்த சம்பவத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* திருப்புவனம் காவல் கொலை விவகாரத்தில், அஜித்குமார் உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைத்து செல்லும் தனிப்படை காவலர், லுங்கியில் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
* கர்நாடக மாநிலம் பெங்களூரு உயிரியல் பூங்காவில், பாசம் காட்டாத தாய் புலியால் மூன்று குட்டிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* 2024-25ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் நன்கொடை வழங்கியது 4 மடங்கு அதிகரித்துள்ளது அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது.
* குடியரசுத் தலைவர் குறிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* வயது முதிர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமான சரோஜா தேவியின் இரு கண்களும் தானம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
* பீகாரில் கடந்த 11 நாட்களில் மட்டும் 31 கொலைகள் நடந்தேறி இருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
* இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து இயல்பாக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
* சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்த இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார். அவர், இன்று அமெரிக்காவின் கலிபோர்னியா பசிபிக் கடலில் தரையிறங்க உள்ளார்.
* ரஷ்ய அதிபர் புடினின் பேச்சுகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கடைசியில் குண்டு போட்டுவிடுகிறார் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புலம்பியுள்ளார்.