ஜியோ, பிஎஸ்என்எல் x page
இந்தியா

ஜியோவிடம் உள்கட்டமைப்பு பகிர்வுத் தொகை வசூலிக்காத பிஎஸ்என்எல்.. அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு!

10 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை JIO நிறுவனத்திடம் இருந்து BSNL வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

Prakash J

ரிலையன்ஸ் ஜியோ என்பது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RJIL) நிறுவனத்திற்குச் சொந்தமானது. மேலும், இந்தியாவில் 4G மற்றும் 5G சேவைகள், பிராட்பேண்ட் போன்ற தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், மே 2014 – மே 2024 வரை என 10 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை JIO நிறுவனத்திடம் இருந்து BSNL வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜியோ, பிஎஸ்என்எல்

சிஏஜியின் கூற்றுப்படி, ரிலையன்ஸ் ஜியோவுடனான மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தை (எம்எஸ்ஏ) பிஎஸ்என்எல் செயல்படுத்தவில்லை. அதன் உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்கத் தவறிவிட்டது. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு (டிஐபி) செலுத்தப்பட்ட கட்டணங்களிலிருந்து உரிமக் கட்டணத்தை பிஎஸ்என்எல் கழிக்கத் தவறியதால் ரூ.38.36 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் BSNL இன் பகிரப்பட்ட செயலற்ற உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு பில் செய்யவில்லை. இதன் விளைவாக மே 2014 முதல் மார்ச் 2024 வரை அரசு கருவூலத்திற்கு ரூ.1,757.76 கோடி இழப்பு மற்றும் அபராத வட்டி ஏற்பட்டது என்று CAG அறிக்கை தெரிவித்துள்ளது.