jharkhand encounter x page
இந்தியா

ஜார்க்கண்ட் | என்கவுன்டரில் மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி பலி!

ஜார்க்கண்ட் என்கவுன்டரில் மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் கொல்லப்பட்டார்.

PT WEB

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் திங்களன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக பிளம் மண்டலம் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே 24 அன்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

jharkhand encounter

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மௌஹாதண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுனாவில் உள்ள காட்டு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தலைக்கு 5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மணீஷ் யாதவ், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் மற்றும் 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டார்.

மனிஷ் யாதவ் மற்றும் குந்தன் சிங் கெர்வார் ஆகியோர் 12 ஆண்டுகளாக செயலில் உள்ளனர்.கர்வா, சத்தீஸ்கர் மற்றும் லதேஹரில் மனிஷ் மீது 40 வழக்குகளும், குந்தன் மீது 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.