இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% மாக இருக்கும் இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது வளைகுடா போர் காரணமாக 6% குறையும் என்று மூடிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்தப் போரின் விளைவால் பல்வேறு பொருள்கள் விலை அதிகரிக்கக்கூடும் என்பதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது .
மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் ஏறக்குறைய ஆறு வாரங்களாக நீடித்து வரும் நிலையில், எல்பிஜி இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், அதன் விலையும் உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உணவு பொருட்கள் முதல் உரம் விலை வரை அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு மக்களின் நுகர்வு முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்; மேலும் உற்பத்தியையும் பாதிக்கும். எனவே, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.