Iphone duo  reuters
இந்தியா

மடித்தால் உடையும் iPhone திரை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஆப்பிள் அறிவித்த Offer!

மடிக்கக்கூடிய iPhone Duo திரை பிரச்சனை: ஆப்பிள் இலவச மாற்றம் அறிவிப்பு!

PT WEB

ஆப்பிள் அறிமுகப்படுத்திய iPhone Duo மடிக்கக்கூடிய போனில் திரை விரிசல் பிரச்சனை ஏற்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் இலவசமாக புதிய போனை மாற்றி வழங்குகிறது.

செய்தியாளர் - M.மீரா

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான iPhone Duo-வில், விற்பனை தொடங்கிய சில நாட்களிலேயே திரை விரிசல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இணையத்தில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த இந்தப் போனில் ஏற்பட்டுள்ள குறைபாடு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

iphone duo

சமீபத்தில் விற்பனைக்கு வந்த இந்த iPhone Duo போனைப் பயன்படுத்தத் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, அதன் மடிப்புப் பகுதியில் விரிசல்கள் மற்றும் பச்சை/வெள்ளை நிறக் கோடுகள் தோன்றுவதாகப் பயனர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் இலவசமாக புதிய போனை மாற்றி (Free Replacement) வழங்குகிறது.

போனை மடித்துத் திறக்கும் போது, அதன் உள்ளே இருக்கும் ஒரு சிறிய மெட்டல் சப்போர்ட் பார் (Support bar) சரியாக நகர மறுக்கிறது. இது போனைத் திறக்கும் போதெல்லாம் திரையின் அடிப்பகுதியில் கடுமையான அழுத்தத்தை (Pressure point) உருவாக்குவதால் திரை உள் பக்கத்திலிருந்து வெடிக்கத் தொடங்குகிறது என 'iFixit' பழுதுபார்ப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்கள் போனில் இந்தத் தயாரிப்புக் குறைபாடு இருந்தால், நீங்கள் உடனடியாக AppleCare வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது அருகிலுள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோரையும் தொடர்புகொள்ள வேண்டும்.

iphone duo

இந்த இலவசப் பரிமாற்றத்தைப் பெற உங்களிடம் பிரீமியம் 'AppleCare+' கூடுதல் காப்பீட்டுத் திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இது நிறுவனத்தின் உற்பத்திப் பிழை என்பதால், ஆப்பிளின் 1 வருட நிலையான உத்தரவாதத்தின் (Standard Warranty) கீழ் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படும். நீங்கள் இந்த போனை டெலிகாம் ஆபரேட்டர்கள் (Mobile Carriers) மூலமாக வாங்கியிருந்தாலும், நேரடியாக ஆப்பிள் நிறுவனத்தை அணுகி புதிய போனைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.