செய்தியாளர்: காமராஜ்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை பெறப்போகும் நபர்கள் யார் யார் என்ற விவரத்தை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு (67) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
இவரின் 52 ஆண்டுகால தவில் இசை சேவையை பாராட்டி இந்த விருதினை புதுச்சேரி அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நம்மோடு பேசிய அவர், “இந்த விருது பெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. பத்மஸ்ரீ விருது பெறுவது ஊக்கமளிக்கிறது. இன்னும் நிறைய கலைஞர்களை உருவாக்க உத்வேகம் அளிக்கிறது. இந்த விருதுடன் என்னுடைய பணி நின்றுவிடாது, மேலும் பணியை மேன்மை படுத்துவேன். தொழில் முறையில் கலையை கொண்டு செல்ல இளைஞர்களுக்கு தவில் இசை பயிற்சி அளிக்க உள்ளேன்” என தெரிவித்தார்.
அவருடைய பேட்டியை வீடியோ வடிவில், இங்கே காணலாம்: