ரத்தன் டாடா pt web
இந்தியா

ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கேஷ்வர்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதுபெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவிற்கு 86 வயதாகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியும் இதுபோன்ற தகவல்கள் வெளியான நிலையில், ரத்தன் டாடாவே தனது எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். அதில், வயது மூப்பு தொடர்பான பரிசோதனைகள் மட்டும் செய்யப்பட்டதாகவும் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லையென்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது உடல்நலத்தை பாதித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RatanTata

டாடா குழும தலைவராக ரத்தன் டாடா 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் தலைவராக இருந்தபோது டாடா குழுமம் வேகமாக வளர்ந்தது. பல்வேறு நிறுவனங்களையும் விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.