indian oil x page
இந்தியா

8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள கேஸ் அடுப்புகள்.. மாற்ற அறிவுறுத்தும் IOC!

வீடுகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய கேஸ் அடுப்புகளுக்குப் பதிலாக, தள்ளுபடி விலையில் புதிய அடுப்புகளை விற்கும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

PT WEB

வீடுகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய கேஸ் அடுப்புகளுக்குப் பதிலாக, தள்ளுபடி விலையில் புதிய அடுப்புகளை விற்கும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடியே 33 லட்சம் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். வீடுகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் கேஸ் அடுப்புகள், திறன் இழப்பினால், வழக்கத்தைவிட அதிக கேஸ் பயன்பாட்டை எடுத்துக் கொள்கிறது. இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.

இதைப் போக்க, வீடுகளில் பாதுகாப்பற்ற மற்றும் திறன் குறைந்த கேஸ் அடுப்புகளை மாற்ற, 8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள கேஸ் அடுப்புகளை மாற்றுமாறுஇந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்திவருகிறது. தங்கள்ஏஜென்ஸிகளில், உரிய சான்றளிக்கப்பட்ட 2 மற்றும் 3 பர்னர்கேஸ் அடுப்புகளை விற்கிறது. பழைய அடுப்பை கொடுத்து, புதிதாகவாங்கினால், 500 ரூபாய் வரை தள்ளுபடிதருவதாக அந்நிறுவனம்தெரிவித்துள்ளது. நவீன மற்றும்உயர் வெப்பத் திறன் கொண்ட கேஸ்அடுப்புக்கு மாறுவதன் மூலம்,வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 2சிலிண்டர்கள் சேமிக்க முடியும் என்றும்இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது.