கேஸ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறதா? - நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?

கேஸ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறதா? - நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?
கேஸ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறதா? - நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?

உலகம் முழுவதும் டெக்னாலஜியானது நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துகொண்டே செல்கிறது. அதில் கேஸ் அடுப்பின் வளர்ச்சியும் ஒன்று. உலக நாடுகள் பலவற்றில் கேஸ் அடுப்புகளிலும் மாற்றங்கள் வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் வழக்கமான எரிவாயு சமையல் அடுப்புகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது சுலபம் என்பதால் அனைவராலும் வாங்கி பயன்படுத்தமுடிகிறது. ஆனால், உட்புற சமையலறைகளில் கேஸ் அடுப்புகளை வைத்து சமைக்கும்போது வாயு உமிழ்வு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. மேலும் இதனை சுவாசிக்கும்போது ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், வென்ட்ரிகுலர் ஹைபர்டிராபி, அல்சைமர், பார்கின்சன்ஸ், உளவியல் சிக்கல்கள், ஆட்டிஸம், ரெட்டினோபதி, கரு வளர்ச்சி பாதிப்பு மற்றும் எடை குறைந்த சிசுக்கள் என பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். நாள்பட்ட நுரையீரல் நோயின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் டை ஆக்சைடு வித்திடுகிறது. இது மிகவும் ஆபத்தானது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

கேஸ் அடுப்புகளிலிருந்து வெளியாகும் வாயுவால் மாசுபட்ட காற்றை குழந்தைகள் நீண்டகாலம் சுவாசித்தால், அவர்கள் நுரையீரல் வளர்ச்சியை அது பாதிக்கும். மேலும், இதுபோன்ற மாசுபட்ட காற்றை சுவாசித்து வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகம் அல்லது பிறக்கும்போதே ஆஸ்துமாவுடன் பிறக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஆண்டுதோறும் பிரிட்டனில் காற்று மாசுபாட்டால் மட்டும் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், 2019ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவான 2.3 மில்லியன் இறப்புகளில் 1.6 மில்லியன் இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்பட்டுள்ளதாக லான்செட் தரவுகள் தெரிவிக்கின்றன.

கேஸ் அடுப்பு மாசுபாட்டை தடுப்பது எப்படி?

வீடுகளுக்குள் கேஸ் அடுப்பால் மாசுபாட்டை முற்றிலுமாக தடுக்கமுடியாது என்றாலும், முடிந்தவரை அதனை குறைக்க சில முயற்சிகளை எடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

  • காற்றோட்டமான சூழலில் கேஸ் அடுப்பை வைத்து சமைக்கவேண்டும்
  • சமைக்கும்போது கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் இருந்தால் ஜன்னல்களை திறந்துவைப்பது அவசியம்.
  • சமையலறையில் எக்சாஸ்ட் ஃபேன்களை பொருத்தவேண்டும்.
  • தரமான கேஸ் அடுப்புகளை வாங்கி பயன்படுத்தவும்
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேஸ் அடுப்பை கடைகளில் கொடுத்து முறையாக சுத்தம் செய்யவும்
  • வேகவைத்தல் மற்றும் வறுத்தல் போன்றவற்றிற்கு பெரும்பாலும் ஓவன்களை பயன்படுத்தவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com