இந்தியா

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.11 கோடி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி!

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.11 கோடி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி!

EllusamyKarthik

கொரோனாவின் இரண்டாவது அலையில் தீவிரமாக சிக்கித் தவித்து வரும் இந்தியாவிற்கு தேவையான நிவாரண பணிகளுக்காக பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் இணைந்து கிராவுட் ஃபண்டிங் தளம் மூலமாக 11,39,11,820 ரூபாயை திரட்டி உள்ளனர். இதனை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“எங்களது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டப்பட்டுள்ளது. நிதி அளித்த, இந்த செய்தியை பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றி. நாம் எல்லோரும் இந்த இக்கட்டான சூழலில் ஒன்றாக இருந்து இதனை சமாளிப்போம்” என கோலி கேப்ஷன் கொடுத்துள்ளார்.  

இந்தியாவில் தினந்தோறும் ஏராளமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.