India Reuters
இந்தியா

கிங் மேக்கர் ஆகும் இந்தியா? கை ஏந்தும் ஐரோப்பிய நாடுகள்.. உலக வரலாற்றில் புது அத்தியாயம்!

ஐரோப்பிய கண்டமே தற்போது இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி காத்துக் கொண்டு நிற்கிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்த போரில், உக்ரைனுக்கு உதவும் நோக்கில், ரஷ்யாவின் டீசல் இறக்குமதிக்கு பெரும் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை, டீசல் இறக்குமதியில் பாதியளவு ரஷ்யாவையே நம்பியிருந்ததால், ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இதுமட்டுமின்றி, மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா போராலும், டீசல் தட்டுப்பாடு ஐரோப்பாவில் பெருமளவு அதிகரித்து வருகிறது. சீனாவும், தனது உள்நாட்டு தேவைகளுக்காக இறக்குமதியை நிறுத்திவிட்டது. எனவே, ஐரோப்பா புதிய சப்ளையர்களை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

petrol

இதனால், அமெரிக்காவின் பக்கம் கவனத்தை திருப்பிய ஐரோப்பா, அவர்களிடம் உதவியை கேட்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவிடம் இருந்து இரு மடங்கு டீசலை ஐரோப்பா இறக்குமதி செய்தது. ஆனால், ஐரோப்பாவின் நிலையை இன்னும் மோசமாக்கும் வகையில், அமெரிக்க டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டத்தையும், டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், ஐரோப்பாவின் ஒரே ஒரு மாற்று வழியாக, இந்தியா மாறியுள்ளது.

அதாவது, உலகிலேயே அதிக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே, இந்தியாவிடம் இருந்து டீசல்களை இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளன. இந்த முயற்சிகள் வெற்றி அடைந்தால், உலக எரிசக்தி வரைபடத்தையே மாற்றும் திறன் இந்தியாவிடம் செல்லும். இதன்மூலம், இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பெருமளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு நல்ல செய்தியாக இருந்தாலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் ஒரு சிக்கல் உள்ளது.

ரஷ்யாவின் கச்ச எண்ணெயை தான் இந்தியா வாங்கி, சுத்திகரிப்பு செய்து, இறக்குமதி செய்ய உள்ளது. ஆனால், ஏற்கனவே, ரஷ்யா கச்சா எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு உட்பட்டு, இந்தியாவின் டீசல் இருக்கிறதா என்பதை பொறுத்தே, இது சாத்தியம் ஆகும். எரிசக்தி பாதுகாப்பை விட, பசுமை ஆற்றல் மாற்றத்திற்கே ஐரோப்பா அதிக முக்கியத்துவம் அளித்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டதே, தற்போதைய நிலைக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.