\
Gunfire Targets Tiger Shroff’s Car in Mumbai
டைகர் ஷெராஃப்Instagram

சல்மான் கானுடன் பணியாற்றக் கூடாது? பாலிவுட் நடிகர் மீது துப்பாக்கிச்சூடு - மும்பையில் பயங்கரம்!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

மும்பையின் ஜூஹு பகுதியில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து விளையாடிவிட்டு டைகர் ஷெராஃப் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல். அவரது காரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்து ஓடியுள்ளனர். இந்தத்தாக்குதலில், டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். எனினும், காரில் இருந்த டிரைவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஆடியோவில், டைகர் ஷெராஃப், நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரித்ததாகவும், அதைப் பொருட்படுத்தாததால் தாக்குதல் நடத்தியதாகவும் அந்தக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், சல்மான் கானுடன் பணியாற்றும் திரையுலகினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த கும்பல் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது.

இந்தச் சூழலில் தான், இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Gunfire Targets Tiger Shroff’s Car in Mumbai
கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல்: 19 பேர் உயிரிழப்பு.. 7 பேர் கைது!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com