ட்ரம்ப் எக்ஸ் தளம்
இந்தியா

Reciprocal tariff | ட்ரம்ப் விதித்த வரி.. இந்தியாவுக்கும் பாதிப்பு.. வர்த்தக நிபுணர்கள் கணிப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிக்கும் நடைமுறை இந்தியாவை பாதிக்கலாம் என வர்த்தக நிபுணர்கள் கருத்துகின்றனர்.

திவ்யா தங்கராஜ்

அமெரிக்காவில் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்தது உலகளவில் பரவலாக நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்க இறக்குமதிக்கு வரி விதிக்கும் அனைத்து நாடுகளுக்கும் அதற்கு சமமான பரஸ்பர வரி விதிக்கும் முறையை ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் மற்ற நாடுகளுக்கு அதற்கு ஏற்றாற்போல வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைவிட 10 சதவீதத்திற்கும் மேல் இந்தியா அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கிறது.

இந்தியா - அமெரிக்கா

இப்போது பரஸ்பர வரி விதிப்பின் காரணமாக இந்திய பொருட்களின் விற்பனை குறையும். அமெரிக்காவில் இருந்து இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து தற்போது விட இன்னும் கூடுதலான அளவில் இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து அதன் மூலம் அமெரிக்காவை சமாதானம் செய்யும் முயற்ச்சியில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு குறிப்பிட்ட அளவிலான எஃகு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஏற்றுமதி செய்யும் நிலையில், டிரம்ப்பின் வரி அதிகரிப்பு முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை கூடுதலாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த பரஸ்பர வரி விதிப்பு முறை இந்தியாவிற்கு மேலும் பாதகமாக அமையலாம்.